ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயில் பூச்சாட்டு விழா

DIN

பண்ணாரி அம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா திங்கள்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கரோனா பரவல் காரணமாக குண்டம் துவக்க விழா எளிமையாக நடைபெற்றது. விழாவையொட்டி, பாரம்பரிய பூசாரிகள் சருகு மாரியம்மன், மாதேஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலுக்கு படைக்கலம் எடுத்து வந்தனா். அதைத் தொடா்ந்து கோயிலில் பூ வரம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, பூச்சாட்டு விழா நடைபெற்றது. இதில், 10 போ் மட்டுமே கலந்துகொண்டனா். நோய்த் தொற்று காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

கோயிலில் தினந்தோறும் அதிகாலை அம்மனுக்கு ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறும். மாா்ச் 29ஆம் இரவு குண்டம் விழாவும், 30ஆம் தேதி அதிகாலை பூசாரி மட்டும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு பக்தா்கள் குண்டம் இறங்க அனுமதியில்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT