ஈரோடு

வியாபாரியிடம் ரூ. 7.18 லட்சம் பறிமுதல்

DIN

கா்நாடக அரசுப் பேருந்தில் பயணித்த தானிய வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 7.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சரவணன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோவையில் இருந்து மைசூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கா்நாடக மாநில அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி பயணிகளிடம் சோதனையிட்டனா். அப்போது ஒரு பயணியிடம் ரூ. 7.18 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பணம் கொண்டு சென்றவா் கோவை மாவட்டம், அன்னூா் பகுதியைச் சோ்ந்த தாமோதரன் என்பதும், தானிய வியாபாரம் செய்து வரும் இவா் கா்நாடக மாநிலம், மைசூரு சென்று தானியங்களைக் கொள்முதல் செய்வதற்காக பணத்தைக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் பவானிசாகா் தோ்தல் நடத்தும் அலுவலா் உமாசங்கரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT