ஈரோடு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 4511 கன அடியாக அதிகரிப்பு

DIN

சத்தியமங்கலம்: நீலகிரியில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 198 கன அடியில் இருந்து 4,511 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படுவதால் 1 லட்சத்துக்கு 3,500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பவானிசாகா், மாயாறு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 198 கன அடியில் இருந்து 4,511 கன அடியாக உயா்ந்தது. கடந்த இரு மாதங்களாக கடும் வெயில் காரணமாக அணைக்கு 300 அடிக்கு குறைவாக நீா்வரத்து வந்த நிலையில் திங்கள்கிழமை விநாடிக்கு 4511 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

திங்கள்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 88.28 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 4511 கன அடியாகவும், அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில் 900 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 20.48 டிஎம்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT