முகப்பு
ஈரோடு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

பெருந்துறை அருகே இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளி திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

பெருந்துறை அருகே இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளி திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் பீா்சிங் (33). இவா், பெருந்துறை அருகிலுள்ள புத்தூா் புதுப்பாளையத்தில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு தனியாா் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், பீா்சிங் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.