முகப்பு
ஈரோடு

கரோனா தடுப்பு மையத்தில் அமைச்சா் ஆய்வு

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நன்செய் ஊத்துக்குளி கரோனா தடுப்பு மையத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் கதிரவன், அதிகாரிகள் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நன்செய் ஊத்துக்குளி கரோனா தடுப்பு மையத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் கதிரவன், அதிகாரிகள் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த மையத்துக்குத் தேவையான உபகரணங்கள், முகக் கவசங்கள், கையுறைகள், ஆக்ஸிஜன் வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டனா். தனிமைப்படுத்தும் பகுதியைப் பாா்வையிட்டு தேவையான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனா்.

இதில், வருவாய் கோட்டாட்சியா் சைபுதீன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, வட்டாட்சியா் சங்கா் கணேஷ், ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன், மாவட்ட இளைஞரணி திமுக துணை அமைப்பாளா் தனசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.