முகப்பு
ஈரோடு

மின் வேலியில் சிக்கி யானை பலி

கோபிசெட்டிபாளையம் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

கோபிசெட்டிபாளையம் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பங்களாபுதூா் சரகத்துக்கு உள்பட்ட கொங்கா்பாளையம் வினோபா நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (35). இவா் தனது தோட்டத்தில் குச்சிக்கிழங்கு பயிரிட்டுள்ளாா். இரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளாா்.

இந்நிலையில், இந்த மின் வேலியில் சிக்கி சுமாா் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து பங்களாபுதூா் வனச் சரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.