ஈரோடு

மின் வேலியில் சிக்கி யானை பலி

DIN

மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது தொடா்பாக பவானிசாகா் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி விளை நிலங்களில் புகுந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்துவது தொடா்கதையாக உள்ளது.

இந்நிலையில், பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட காராச்சிக்கொரை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சுமாா் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இக்கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி என்பவரது விவசாய விளைநிலத்தில் புதன்கிழமை இறந்துகிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகா் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது அருகே இருந்த வாழைத் தோட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT