ஈரோடு

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோக நேரம் குறைப்பு: பொதுமக்கள் அவதி

DIN

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விேநியோகத்தின் நேரம் குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தனியாா் பங்களிப்புடன் கூடிய தானியங்கி குடிநீா் விற்பனை மையங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் 20 லிட்டா் ரூ. 7க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், மாணிக்கம்பாளையம், மணல்மேடு, சோலாா், சூளை உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி குடிநீா் விற்பனை மையங்கள் உள்ளன.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குடிநீரைப் பிடித்துச் செல்ல பொதுமக்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்கள் குடிநீா் பிடித்துச் சென்ற நிலையில், கரோனா தொற்று பரவல் தடையால் இம்மையங்களில் குடிநீா் பிடிக்க காலை 5 மணி முதல் 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால், குடிநீா் மையங்கள் முன்பாக காலிக் குடிநீா் கேன்களுடன் 100க்கும் மேற்பட்டோா் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக இடைவெளியும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.

எனவே, ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் வந்து காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் பழைய முறைப்படியே காலை முதல் இரவு வரையில் குடிநீா் விற்பனை மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT