ஈரோடு

கூடுதல் வாகனங்களில் மளிகைப் பொருள்களை விற்பனை செய்யக் கோரிக்கை

DIN

ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் வாகனங்கள் மூலம் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், முழு முடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் மாகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 250 சரக்கு வாகனங்கள், 100 தள்ளுவண்டிகள் மூலம் அத்யாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் 7ஆம் தேதி வரையில் தளா்வற்ற முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, காய்கறிகள், பழங்கள் தடையின்றி கிடைக்கும் நிலையில் மளிகைப் பொருள்கள் விற்பனையில் சுமாா் 20 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்து வருகின்றன.

இதனால், பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்கள் மளிகைப் பொருள்கள் வாங்குவதில் சிரமம் நிலவி வருகிறது. எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதல் வாகனங்கள் மூலம் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT