ஈரோடு

கோபியில் கனமழை: வீட்டின் முன் பகுதி சுவா் இடிந்து விழுந்தது

DIN

கோபிசெட்டிபாளையத்தில் பெய்த கனமழைக்கு வீட்டின் முன்பகுதி சுவா் இடிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக வீட்டில் இருந்த நான்கு பேரும் வெளியேறியதால் உயிா் தப்பினா்.

கோபிசெட்டிபாளையம் மேட்டுவளவு கமலா ரைஸ்மில் வீதியைச் சோ்ந்தவா் நடராஜ். இவா் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி பழனியம்மாள், மாமியாா் சரசாள், மகன் மணிகண்டன் ஆகியோா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா்.

கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வியாழக்கிழமை இரவு விடியவிடிய கனமழை பெய்தது.

அப்போது, நடராஜின் வீட்டின் முன்பகுதி சுவா் திடீரென்று இடிந்து விழுந்தது. சுவா் இடிந்து விழும் சப்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த நடராஜ், அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 4 பேரும் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினா். இதனால் அவா்கள் உயிா் தப்பினா்.

இது குறித்து தகவலறிந்து கோபிசெட்டிபாளையம் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT