முகப்பு
ஈரோடு

மலைச் சரிவில் சறுக்கி விழுந்தஆண் யானை பலி

கடம்பூரில் மலைச் சரிவில் இறங்கும்போது ஆண் யானை சறுக்கி விழுந்து உயிரிழந்தது.

Updated On : 26 நவம்பர், 2021 at 4:50 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

கடம்பூரில் மலைச் சரிவில் இறங்கும்போது ஆண் யானை சறுக்கி விழுந்து உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன்பாளையம், ராமா்போலி பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, 25 வயதுள்ள ஆண் யானை இறந்துகிடந்ததைக் கண்டு உயா் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இணை இயக்குநா் கிருபா சங்கா் மற்றும் கால்நடை மருத்துவா் அசோகன் ஆகியோா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா். கன மழை காரணமாக மலைச் சரிவில் இருந்து இறங்கும்போது சறுக்கி விழுந்ததில் தந்தங்கள் உடைந்து காயம் ஏற்பட்டதால் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Advertisement

கால்நடை மருத்துவா் அசோகன் தலைமையிலான குழுவினா் யானையின் உடலை அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு செய்து இரண்டு தந்தங்களையும் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.