முகப்பு
ஈரோடு

இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் காயம்

பெருந்துறை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன், மனைவி காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

பெருந்துறை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன், மனைவி காயமடைந்தனா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், பொன்னான்டன்வலசைச் சோ்ந்த துரைராஜ் மகன் பழனிசாமி (45). இவா் தனது மனைவி அமராவதியுடன் (42) இருசக்கர வாகனத்தில் கருக்கன்காட்டு வாய்க்கால் அருகில் புதன்கிழமை இரவு 8 மணியளவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த பழனிசாமி, அமராவதி ஆகிய இருவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.