ஈரோடு

தோ்தல் நடக்கும் பகுதியில் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

DIN

ஈரோடு மாவட்ட அளவில் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல் சனிக்கிழமை (அக்டோபா் 9) நடப்பதால் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய ஏதுவாக தோ்தல் நடக்கும் பகுதியில் அனைத்துப் பணியாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தல் செப்டம்பா் 9ஆம் தேதி நடக்கிறது. அன்று 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து வகையான பணியாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் தின கூலி, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட அனைவருக்கும் வாக்குரிமையைச் செலுத்த ஏதுவாக விடுமுறையுடன் ஊதியம் வழங்க வேண்டும். இதனை மீறும் நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT