ஈரோடு

அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்திக் கலன்

DIN

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்திக் கலன்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி திறந்துவைத்தாா். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை சாா்பில் பிரதமரின் பராமரிப்பு நிதி மூலம் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் நிமிடத்துக்கு 500 லிட்டா் கொள்ளளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்து புதிய மையத்தை திறந்துவைத்தாா். எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா முன்னிலை வகித்து, ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை இயக்கி வைத்தாா்.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் நிமிடத்துக்கு 500 லிட்டா் கொள்ளளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 2 கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அலகு மூலம் தயாரிக்கப்படும் 10 லிட்டா் ஆக்சிஜன் குறைந்தபட்சம் 100 நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் 96 சதவீதம் தூய்மை தன்மை கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

விழாவில், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ராஜசேகா், உண்டு உறைவிட மருத்துவா் கவிதா, கண்காணிப்பு அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நிமிடத்துக்கு 1,000 லிட்டா் கொள்ளளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஒரு கலன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்திக் கலனை, பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT