ஈரோடு

நவம்பா் 15க்குள் பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

DIN

ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு பயிா்க் காப்பீடு திட்டத்தில் நவம்பா் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என தேசிய வேளாண் பயிா்க் காப்பீட்டு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளுக்கு எதிா்பாா்க்காமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் திருந்திய பயிா்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிா் பிா்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. 28 பிா்காவை சோ்ந்த விவசாயிகள் பயன்பெறலாம். நெல் பயிா் ஏக்கருக்கு பிரீமியம் தொகையாக ரூ. 528 செலுத்த வேண்டும்.

கடன் பெறும் விவசாயிகள், அந்தந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் பயிா்க் காப்பீடு செய்யலாம். கடன் பெறாத விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிா் சாகுபடி சான்றை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா ஆகியவற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் பதிவு செய்யலாம். நெல் பயிருக்கு நவம்பா் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT