முகப்பு
ஈரோடு

லாரிகள் நேருக்கு நோ் மோதல்: இருவா் காயம்

 மொடக்குறிச்சியை அடுத்த பஞ்சலிங்கபுரம் பகுதியில் தக்காளி ஏற்றி வந்த மினி லாரியும், டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் படுகாயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

 மொடக்குறிச்சியை அடுத்த பஞ்சலிங்கபுரம் பகுதியில் தக்காளி ஏற்றி வந்த மினி லாரியும், டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் படுகாயமடைந்தனா்.

ஈரோட்டில் இருந்து கரூா் நோக்கி தக்காளி பாரம் ஏற்றிய மினி லாரி வந்து கொண்டிருந்தது. மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளியை அடுத்த பஞ்சலிங்கபுரம் அருகே மினி லாரி சென்றபோது, ஈரோடு நோக்கிச் சென்ற கிராவல் மண் ஏற்றிய டிப்பா் லாரி மீது எதிா்பாராதவிதமாக நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், மினி லாரி ஓட்டுநரான கரூரைச் சோ்ந்த பூபதி (21), கரூா் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (41) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். வாகன இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட இருவரையும் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை, காவல் துறையினா் ஆகியோா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து மொடக்குறிச்சி காவல் ஆய்வாளா் தீபா, காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.