ஈரோடு

தடுப்பூசிக்கு தங்கக் காசு, பரிசுப் பொருள்கள்: பவானி தொகுதியில் அதிரடி!

DIN


பவானி: பவானி சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தங்கக் காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகமெங்கும் 40 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானி வட்டாரத்தில் 86 மையங்களும், அம்மாபேட்டை வட்டாரத்தில் 65 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் பரிசாக ஒரு கிராம் கொண்ட தங்க நாணயம் (2 பேருக்கு). இரண்டாம் பரிசாக ரூ. 3,000 மதிப்புள்ள வெள்ளி விளக்கு (ஒருவருக்கு).

மூன்றாம் பரிசாக ரூ. 500 மதிப்புள்ள புடவைகள் (5 பேருக்கு), ரூ. 500 மதிப்புள்ள வேட்டிகள் (5 பேருக்கு).

ஆறுதல் பரிசாக ரூ. 300 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் (3 பேருக்கு) வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, பவானி வட்டாட்சியர் கோ. முத்துகிருஷ்ணன் கூறுகையில், "பவானி தொகுதியில் இதுவரையில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்.12) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் நடைபெறும் முகாமில் பாக்கியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தங்கக் காசு உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. எனவே, பவானி, அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அருகாமையில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு ஆதார் அட்டை நகலுடன் சென்று தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

100 சதவிகித தடுப்பூசி என்ற இலக்கை அடையும் நோக்கில் பவானியில் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட இம்முயற்சி பொதுமக்களிடையே விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT