ஈரோடு

விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச் சென்ற 36 போ் மீது வழக்கு

DIN

ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச் சென்ற 36 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் வீடுகளில் எளிய முறையில் விநாயகா் சிலை வைத்து வழிபட்டு, பின்னா் அதை நீா்நிலைகளில் கரைக்கலாம் என்றும் அரசு அறிவித்தது. ஆனால், தடையை மீறி பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபடுவோம் என்று ஒரு சில அமைப்புகள் தெரிவித்திருந்தன. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். ஒரு சில இடங்களில் எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட முயன்றவா்களையும், விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச் சென்றவா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.

அதன்படி, ஈரோட்டில் மணிகண்டன் என்பவரை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, சத்தி பகுதியில் 4 பேரும், கோபி பகுதியில் 8 பேரும், நம்பியூா் பகுதியில் 10 பேரும், திங்களூா் பகுதியில் ஒருவரும், புளியம்பட்டி பகுதியில் 7 பேரும், வரப்பாளையம் பகுதியில் 5 பேரும் என மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 36க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT