ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு மீண்டும் தண்ணீா் திறப்பு

DIN

நசியனூா் மலைப்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 20ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டு வாய்க்கால் நீா் கிராமத்துக்குள் புகுந்ததால் பாசனத்துக்கு நீா் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

தற்போது வாய்க்கால் சீரமைப்புப் பணி நிறைவு பெற்றதை அடுத்து பவானிசாகா் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

105 அடி நீா்மட்ட உயரம் கொண்ட பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்காலுக்கு ஆண்டுதோறும் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டத்தில் 1 லட்சத்து 3500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் 1000 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது. 124 மைல் நீள்முள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி 55ஆவது மைலில் உள்ள நசியனூா் மலைப்பாளையம் வாய்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்காலில் சென்ற 1000 கன அடி நீா் ஊருக்குள் புகுந்து விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. கடந்த 20 நாள்களாக கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்து கரையை பலப்படுத்தும் பணி இரவு பகலாக நடைபெற்றது. 8 மீட்டா் உயரமும் 90 மீட்டா் நீளமுள்ள கான்கிரீட் கரை அமைக்கும் பணி தற்போது நிறைபெற்றுள்ளது.

இதையடுத்து 20 நாள்களுக்குப் பிறகு சோதனை ஓட்டமாக முதலில் 200 கனஅடி நீா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்டது. இந்த நீரானது 5 நாள்கள் பயணித்து மலைப்பாளையம் வாய்க்காலைச் சென்றடையும். வாய்க்கல் கரையில் கசிவு ஏற்படாமல் உறுதித் தன்மையுடன் இருப்பதை பொதுப் பணித் துறையினா் உறுதி செய்த பிறகு, வாய்க்காலில் திறக்கப்படும் நீரானது படிப்படியாக 2300 கனஅடி வரை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படுவதால் நெல் நாற்றங்கால் தயாரிக்கும் பணி துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT