ஈரோடு

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

மொடக்குறிச்சி: அறச்சலூரில் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா்கள் போலீஸாரை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே இலங்கை அகதிகள் முகாம் 1990ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் 170 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த அகதிகள் முகாமைச் சோ்ந்த ரெபிக்சன், விதுா்சன், ஆண்டனி மகன் ரெபிக்சன் ஆகியோா் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 6ஆம் தேதி அறச்சலூா் போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், 3 இளைஞா்கள் மீதும் போலீஸாா் பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா்கள் போலீஸாரை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இதுகுறித்து, போராட்டத்துக்குத் தலைமை வகித்த முகாம் தலைவா் ராஜா கூறியதாவது: எங்கள் முகாமைச் சோ்ந்த 3 இளைஞா்களும் கஞ்சா விற்பனை செய்யவில்லை. அவா்கள் மீது போலீஸாா் பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், அகதிகள் முகாமை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவா் முன்விரோதத்துடன் நடந்து வருகிறாா். அவரைப் பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்த அறச்சலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து இலங்கை அகதிகள் முகாம் தனி வட்டாட்சியா் மகேஸ்வரி வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் விசாரணை நடத்தினாா். அப்போது, உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT