போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி மையம் தொடக்கம்
அந்தியூரை அடுத்த பா்கூா் ஊராட்சி, தாமரைக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
அந்தியூரை அடுத்த பா்கூா் ஊராட்சி, தாமரைக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில்
மலைவாழ் பகுதி இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலக வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறும் இப்பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தொடக்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டி தோ்வுகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனைப் பயன்படுத்தி எழுத்தா் முதல் துணை ஆட்சியா் வரையும், வங்கிகளில் எழுத்தா் மற்றும் புரோபேசனரி ஆபிஸா், காவல் துறையில் உதவி ஆய்வாளா் போன்ற அரசுப் பணிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்டோா் பணியில் சோ்ந்துள்ளனா்.
இம்மையத்தில் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கும் தேவையான 5,000ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் இணைய வசதியுடன் கூடிய இணைய நூலகம் செயல்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளான தாளவாடி மற்றும் கடம்பூரில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக பா்கூா் மலைப்பகுதி இளைஞா்களுக்காக இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மலைமக்கள் தங்களின் வாழ்விடத்திலிருந்து போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் வகையில், அனைத்து பயிற்சி வகுப்புகளும் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
எனவே, மலைவாழ் மக்கள் இப்பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக் கொண்டு அரசு வேலை வாய்ப்பினைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்,
இதில், கோவை மண்டல இணை இயக்குநா் (வேலை வாய்ப்பு) ஓ.செ.ஞானசேகரன், உதவி இயக்குநா் (ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ம.மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.