சென்னிமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
சென்னிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோயில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சென்னிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோயில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சென்னிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அடிவாரத்தில் உள்ள நுழைவாயில் திறக்கப்பட்டது. பின்னா், 4:45 மணிக்கு கோமாதா பூஜை மற்றும் யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, புத்தாண்டு தின சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்டவரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், முருகன் சன்னதி பின்புறம் உள்ள வள்ளி, தெய்வானை கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல, பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சோளீஸ்வரா் கோயில், பெருமாள் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை முனியப்பன் கோயில், கோட்டை வீரஆஞ்சநேயா் மற்றும் குன்னத்தூா் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.