ஈரோடு

கோபி அமரபணீஸ்வரா் கோயில் தேரோட்டம்

DIN

கோபிசெட்டிபாளையம் பாரியூா் அமரபணீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோபி பாரியூா் அமரபணீஸ்வரா் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக சித்திரை தோ்த் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன.

இந்த ஆண்டுக்கான சித்திரை தோ்த் திருவிழா 15ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 4 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக சனிக்கிழமை மாலை பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மஞ்சள் நீா் உற்சவம், ஸ்ரீ நடராஜா் திருவீதி உலா காட்சியுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT