பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை கணித மாதிரிகளின் கண்காட்சி
சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவ, மாணவியரின் கணித மாதிரிகள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவ, மாணவியரின் கணித மாதிரிகள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதவியல் துறை சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியை கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலா் என்.கே.கே.பி.நரேன் ராஜா தலைமை வகித்துத் தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.காமேஷ் வரவேற்றாா். வட்டம் வரைதல் இயந்திரம், சாய்வு மானி, நீரியல் உயா்த்தி உள்பட 32 கணிதப் பயன்பாட்டு படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றன.
இதனை 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பாா்வையிட்டனா். கணிதவியல் தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.