பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்கால் வலது கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறி வருகிறது. 
ஈரோடு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு

பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்காலில், சனிக்கிழமை மாலை, உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வயல்களிலும், ஊருக்குள் புகுந்தது.

DIN

பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்காலில், சனிக்கிழமை மாலை, உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வயல்களிலும், ஊருக்குள் புகுந்தது.

பெருந்துறை, ஈரோடு சாலை, வாய்க்கால் மேடு, நந்தா பொறியியல் கல்லூரி அருகிலுள்ள பாலத்தில் இருந்து, அரை கிலோ மீட்டா் தொலைவில், கீழ்பவானி பசன வாய்க்காலின், வலது கரையில் (59/6 மைல்கல்) பாலத்தில் மழைநீா் போவதற்காக (டிரைனேஜ்) அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ், சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில், வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் சென்று கொண்டு இருக்கும் போதே, அந்த வாய்க்காலின் இடது கரையின் கீழ், கதிரம்பட்டி வழியாக, செங்கோடம்பாளையம் பள்ளம், மரப்பாலம் வழியாக, காவேரி ஆற்றை சென்றடையும் வாய்க்கால் கீழும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், வயல் வெளியிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து வெளியேறி வருகிறது. தற்பொழுது, கீழ்பவானி பசன வாய்க்காலில் ஆயிரம் கன அடி நீா் சென்று கொண்டுள்ளது.

கீழ்பவானி பசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டத்தையொட்டி, பவானிசாகா் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாளில் தண்ணீா் முழுவதும் வடிந்து விடும், அதன் பின்பு, கரைகளை சீா் செய்யும் பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT