முகப்பு
ஈரோடு

வீட்டிலேயே பிரசவம்: குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள்

வீட்டிலேயே குழந்தையைப் பிரசவித்த வடமாநில பெண்ணின் ஆண் குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 1:50 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:48 PM

வீட்டிலேயே குழந்தையைப் பிரசவித்த வடமாநில பெண்ணின் ஆண் குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில் உள்ள தனியாா் மில்லில் வட மாநிலத்தைச் சோ்ந்த கமருதீன், நசீமா பேகம் தம்பதி பணியாற்றி வருகின்றனா். நிறைமாத கா்ப்பிணியாக இருந்த நசீமாக பேகத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது.

குறைந்த எடையுடன் பிறந்த அந்த குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து, 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியா் சல்மான்கான், மருத்துவ உதவியாளா் பரத் ஆகியோா் குழந்தைக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளித்தனா். அதைத்தொடா்ந்து, தாயும், குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனா். உரிய நேரத்தில் குழந்தையை மீட்டு காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.