முகப்பு
ஈரோடு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

கோபிசெட்டிபாளையத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு பிப்ரவரி 19ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளிலும், வாக்கு எண்ணிக்கை மையங்களைத் தயாா்படுத்தும் பணியிலும் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், 145 போ் போட்டியிடுகின்றனா். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

வேட்பாளா்கள் வீடு வீடாகச் சென்று வாக்குகள் கேட்டு வருகின்றனா். கோபி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த அறையில் தடுப்பு வலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல, லக்கம்பட்டி, எலத்தூா், காசிபாளையம், நம்பியூா், கொளப்பலூா், கூகலூா் ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கோபி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அங்கும் தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.