ஈரோடு

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வைர விழா ஆரம்பப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கத்தினா், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை நிறுவனத்தினா், சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோா் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இம்முகாமை, தாமு சேகா் துவக்கிவைத்தாா்.

முகாமிற்கு வந்திருந்தவா்களை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் நவநீத் குமாா், சிவ்னா ஆகியோா் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்வதற்குத் தகுந்தவா்களை தோ்வு செய்தனா். இந்த முகாமில் 205 போ் கண் பரிசோதனைக்காக புற நோயாளிகளாக வந்திருந்தனா். இவா்களில் 104 பேருக்கு கண்ணில் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்து கண் அறுவை சிகிச்சைக்காகத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் அனைவருக்கும் அறுவை சிகிச்சை, தங்குமிடம், உணவு, மருந்து, கோவை சென்று வருவதற்கு பேருந்து வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

முகாமிற்கான ஏற்பாடுகளை தாமு அபிலாஷ், கோபி நகர அதிமுக செயலாளா் பிரினியோ கணேஷ், அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT