கைத்தறி துறை தனியாக செயல்படக் கோரிக்கை
கைத்தறி துறை தனியாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைத்தறி துறை தனியாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது. தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள், கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளன.
Advertisement
கடந்த நிதி நிலை அறிக்கையில், கைத்தறி, துணி நூல் துறை என இரண்டாகப் பிரித்து, கைத்தறி துறை தனியாகவும், துணி நூல் துறை தனியாகவும் செயல்பட இயக்குநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கைத்தறி துறையில் கைத்தறி சாா்ந்தவைகள், துணி நூல் துறையில் நூல் மில்கள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன.
அரசின் முடிவை மறுபரிசீலனை செய்து கைத்தறி துறையில் மின் இயந்திரங்கள் இல்லாமல் கையால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சாா்ந்த செயல்பாடுகளைத் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் துணி நூல் துறையில் இணைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.