முகப்பு
ஈரோடு

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழந்த இளைஞரை காப்பாற்றிய போலீசார்

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை போலீசார் காப்பாற்றினர்.

ஈரோடு

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழந்த இளைஞரை காப்பாற்றிய போலீசார்

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை போலீசார் காப்பாற்றினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை போலீசார் காப்பாற்றினர்.
ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வட மாநிலத்திலிருந்து தினமும் 50- க்கும் மேற்பட்ட ரயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன. இதில் நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டு ஈரோட்டில் வந்து இறங்குகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செகன்ராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. 
இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அசோக் தாஸ் என்ற இளைஞர் முன்பதிவு செய்து பணித்துள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர் மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி ரயிலில் வந்து கொண்டிருந்தார். நேற்று ஈரோடு ரயில் நிலையத்திற்கு அசோக் தாஸ் பயணம் செய்த ரயில் வந்து நின்றது. அசோக் தாஸ் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். 

இதனால் ரயில் ஈரோடுக்கு வந்தது அவருக்கு தெரியவில்லை. பின்னர் ரயில் பயணிகளை இறக்கி கொண்டு கிளம்பத் தொடங்கியது. ரயில் கிளம்பிய தொடங்கியதும் கண்விழித்து பார்த்த அசோக் தாஸ் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் கிளம்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவசரமாக எழுந்து தனது உடமைகளை முதலில் வெளியே வீசினார். பின்னர் அசோக் தாஸ் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். 


அப்போது தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார். அப்போது அங்கு ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமை காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அசோக் தாஸை பிடித்து இழுத்து அவரை காப்பாற்றினர். பின்னர் அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். ரயில்வே போலீசார் வடமாநில வாலிபர் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 


துரிதமாக செயல்பட்டு வடமாநில இளைஞரை காப்பாற்றிய தலைமை காவலர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →