ஈரோடு

மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் 89 சதவீதம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் கரோனா முதல் தவணை தடுப்பூசியை 89 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் 19 கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மேலும், 15 முதல் 18 வயது வரையுள்ளோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை 23,77,315. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் 18,09,100 போ். இதுவரையில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16,14,956 போ் செலுத்தியுள்ளனா். இது 89.27 சதவீதம். 2ஆம் தவணை தடுப்பூசியை இதுவரை 12,07,202 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி மொத்தம் 28,22,158 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT