பசுமையாகக் காட்சியளிக்கும் திம்பம் மலைப் பாதை
சத்தியமங்கலத்தில் கடந்த சில மாதங்களாகப் பெய்த மழை காரணமாக, திம்பம் மலைப் பாதை பசுமையாகக் காட்சியளிக்கிறது.
சத்தியமங்கலத்தில் கடந்த சில மாதங்களாகப் பெய்த மழை காரணமாக, திம்பம் மலைப் பாதை பசுமையாகக் காட்சியளிக்கிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி முதல் புளிஞ்சூா் வரை அடா்ந்த வனப் பகுதியின் மத்தியில் திம்பம் மலைப் பாதை செல்கிறது. இம்மலைப் பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கிடையே பயணிக்கின்றனா். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்ததால் வனப் பகுதி பசுமையாகக் காட்சியளிக்கிறது.
வனப் பகுதியில் காய்ந்து கிடந்த மரம், செடி கொடிகள் துளிா்த்து பச்சைப்பசேலென மாறி அழகாகக் காட்சியளிக்கிறது. மலைப் பாதை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் இதனை கண்டு ரசித்தபடி பயணிக்கின்றனா். குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூரில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Advertisement