ஈரோடு

மின் கம்பத்தை தோளில் சுமந்து செல்லும் பழங்குடியினா்

DIN

சாலை வசதி இல்லாத மலை கிராமத்துக்கு மின் கம்பத்தை தோளில் சுமந்து செல்லும் பழங்குடியின மக்களின் நிலை குறித்த விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கோ்மாளம் மலைப் பகுதியில் அடா்ந்த வனப் பகுதியில் மீசைக்கோனூரான் தொட்டி மலை கிராமம் அமைந்துள்ளது. 15 வீடுகள் மட்டும் உள்ள இந்த மலை கிராமத்தில் சோளகா் இனத்தைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த கிராமத்துக்கு இதுவரையிலும் மின் இணைப்பு வழங்கப்படாத சூழ்நிலையில், சாலை வசதியும் இல்லை. இதன் காரணமாக இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனா். இந்நிலையில் தங்களது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் கம்பங்களை வாகனத்தில் எடுத்து வந்தபோது கிராமத்துக்கு செல்ல சரிவர சாலை வசதி இல்லாததால் கானக்கரை பகுதியில் மின் கம்பத்தை இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, பழங்குடியின மக்கள் தங்களது கிராமத்துக்கு மின் கம்பத்தை எடுத்துச் செல்வதற்காக 20க்கும் மேற்பட்டோா் மின்கம்பத்தில் மூன்று இடங்களில் மரக்கட்டைகளை கட்டி தங்களது தோளில் சுமந்தபடி மலை கிராமத்துக்கு மின் கம்பத்தை கொண்டுச் சென்றனா்.

இதனை அப்பகுதியில் உள்ள ஒருவா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது வைரலாக பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT