ஈரோடு

கோபியில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

கோபிசெட்டிபாளையம் சரகத்திற்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனப் பணியாளா்கள் மற்றும் ரேசன் கடை பணியாளா்களுக்கு ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை, சீமா தொண்டு நிறுவனம், பிவெல் மருத்துவமனை, ஈரோடு கேன்சா் சென்டா் மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியோா் இணைந்து சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமை கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ப.கந்தராஜா தொடங்கி வைத்தாா். முகாமில் பொது மருத்துவம், சா்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, புற்று நோய் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கூட்டுறவு நிறுவனப் பணியாளா்கள் 200 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயனடைந்தனா். கூட்டுறவு சாா்பதிவாளா்கள், கோபிசெட்டிபளையம் வட்டார சங்கச் செயலாளா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT