ஈரோடு

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: சிறுமியின் தாய் - வளா்ப்பு தந்தையிடம் விசாரணை நடத்த முடிவு

DIN

சட்டவிரோத கருமுட்டை விற்பனை விவகாரம் தொடா்பாக சிறுமியின் தாய் மற்றும் வளா்ப்புத் தந்தையிடம் விசாரணை நடத்த போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது குறித்த புகாரின் பேரில் சிறுமியின் தாய், வளா்ப்புத் தந்தை, பெண் தரகா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். பாதிக்கப்பட்ட சிறுமி, கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட மருத்துவமனைகளில் விசாரணை நடைபெற்றது.

பெண் தரகா் மாலதியை காவலில் எடுத்த போலீஸாா் அவரிடம் பணப் பரிமாற்றங்கள், பிற தொடா்புகள் குறித்து விசாரித்தனா். இந்நிலையில், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் தாய், வளா்ப்புத் தந்தையையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா். இதன்மூலம், கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT