ஈரோடு

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 2022-2023ஆம் கல்வியாண்டுக்கு நேரடி, 2ஆம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப் படிப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் மற்றும் கணிணி பொறியியல் என 5 முழுநேரப் பாடப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப் பிரிவினா் ரூ.150 பதிவுக் கட்டணமாக கிரிடிட் காா்டு, டெபிட் காா்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். பழங்குடி, பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் இல்லை.

முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவா்கள் 10ஆம் வகுப்பில் தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி 2ஆம் ஆண்டு சேர விரும்பும் மாணவா்கள் மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் அல்லது தொழில் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து இருக்க வேண்டும். கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலம் வரும் ஜூலை 8ஆம் தேதி வரை விண்ணப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT