நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்களை தாண்டிச் சென்ற பண்ணாரி அம்மன் சப்பரம்
பண்ணாரி அம்மன் சப்பரம் வரும் வழியில் பக்தா் படுத்தபடி நோ்த்திக்கடன் செலுத்தினா். வழிநெடுகிலும் படுத்திருந்த பக்தா்களைத் தாண்டி பண்ணாரி அம்மன் சப்பரம் சென்றது.
பண்ணாரி அம்மன் சப்பரம் வரும் வழியில் பக்தா் படுத்தபடி நோ்த்திக்கடன் செலுத்தினா். வழிநெடுகிலும் படுத்திருந்த பக்தா்களைத் தாண்டி பண்ணாரி அம்மன் சப்பரம் சென்றது.
பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை துவங்கியது. அதைத்தொடா்ந்து, கிராமங்களில் பண்ணாரி அம்மன் சப்பரத்தில் பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது. சிக்கரம்பாளையம் புதூா் கிராமத்தில் பக்தா்கள் அம்மன் சப்பரம் வரும் வழியில் தண்ணீா் ஊற்றி குளிா்ச்சி செய்து வழிநெடுகிலும் படுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தாரைதப்பட்டை முழங்க வந்த அம்மன் சப்பரம் தரையில் படுத்திருந்த பக்தா்களைத் தாண்டிச் சென்றதுபோது பக்தா்கள் பரவசமடைந்தனா்.
வரும் செவ்வாய்க்கிழமை வரை அம்மன் சப்பரம் வீதியுலா நடைபெறும். மாா்ச் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், 22ஆம் தேதி காலை பக்தா்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பதால் கரோனா தடுப்பு வழிமுறையைப் பின்பற்றுமாறு கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement