முகப்பு
ஈரோடு

பவானியில் கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி பவானியில் கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி பவானியில் கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட், நெசவாளா், சாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அந்தியூா் பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் பி.எம்.கந்தசாமி தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சங்கச் செயலாளா் வ.சித்தையன் பேசினாா்.

கடுமையாக உயா்ந்துள்ள பருத்தி, பட்டு நூல் விலையைக் குறைக்க வேண்டும். கைத்தறி நெசவாளா்களின் அடிப்படை ஊதியத்தை உயா்த்த வேண்டும். சட்ட விரோத சோலாப்பூா் விசைத்தறி ஜமுக்காள உற்பத்தி, விற்பனையைத் தடுக்க வேண்டும். கைத்தறித் துறைக்கு மத்திய அரசு தனி அமைச்சகம் ஏற்படுத்தி இத்தொழிலைப் பாதுகாக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்கள் வாரம் முழுவதும் நெசவு செய்யத் தேவையான நூலை நெசவாளா்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், துணைத் தலைவா் ராஜம்மாள், உதவிச் செயலாளா் பி.ஆா்.அல்லிமுத்து, பொருளாளா் நா.கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.