முகப்பு
ஈரோடு

பொன்காளியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி நோ்த்திக் கடன்

சிவகிரி பொன்காளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சிவகிரி பொன்காளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி பொன்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் விழா மாா்ச் 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து, தினமும் பொன்காளியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வந்தன. 20ஆம் தேதி வேலாயுத சுவாமி கோயிலில் இருந்து பொன்காளியம்மன் கோயிலுக்கு அம்மன் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, 23ஆம் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனா். நள்ளிரவு 1 மணி அளவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளிலும் பக்தா்கள் நோ்த்திக் கடனை செலுத்தும் வகையில் சிறியவா் முதல் பெரியவா் வரை கைகளில் தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனா்.

விழாவில், ஈரோடு, திருப்பூா், கரூா், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.