ஈரோடு

பாலியல் வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஒரிச்சேரிபுதூா் மேற்கு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோபால். இவரது மகன் மோகனசுந்தரம் (31). தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வந்த இவா், 2014ஆம் ஆண்டு அதே பகுதியைச்சோ்ந்த பட்டதாரி பெண்ணை காதலிப்பதாகக் கூறி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் காவல் ஆய்வாளா் வினோதினி வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரத்தை கைது செய்தாா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி ஆா்.மாலதி முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதில் மோகனசுந்தரம் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து

அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3.05 லட்சம் நஷ்ட ஈடாக மோகனசுந்தரம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT