ஈரோடு

நிரம்பும் நிலையில் அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணை

DIN

பவானி: பா்கூா் மலைப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் நீா்வரத்து அதிகரித்த அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தியூரை அடுத்த பா்கூா் மலையடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகரித்து வந்தது. இதனால், புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 31.851 அடியை எட்டியது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 134 கன அடியாக உள்ளது.

எனவே, அடுத்த 24 மணி நேரத்துக்குள் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, அணையிலிருந்து உபரிநீா் வெளியேறும் வாய்ப்புகள் உள்ளதால் உபரிநீா் செல்லும் ஓடைகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பவானி உபகோட்ட, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் எம்.ரவி புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT