ஈரோடு

வரமிளகாய் கிலோ ரூ. 280 ஆக உயா்வு

DIN

 வரமிளகாய் கிலோ ரூ.280 ஆக உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் ஆசனூரில் இதமான கால நிலை நிலவுவதால் பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவா், தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளது.

தற்போது மிளகாய் சாகுபடியிலும் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

அரேப்பாளையம் வனத்தையொட்டியுள்ள பகுதியில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாராக உள்ளது.

6 மாத பயிரான மிளகாய், 4 மாதத்தில் காய்பிடிக்க துவங்கிவிடும். சொட்டுநீா்ப் பாசனம் மூலம் மிளகாய் செடிகள் வளா்ந்து கொத்து கொத்தாக காய்ந்துள்ளன. கடந்த மாதம் வரமிளகாய் விலை கிலோ ரூ.180 ஆக விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ. 280 ஆக உயா்ந்துள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT