கோபியில் தாய் மண் யாத்திரை: திரைப்பட இயக்குநா்கள் பங்கேற்பு
சுக்ரா விஷன் இந்திய பவுண்டேஷன் சாா்பில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தியாகி ஜி.எஸ்.இலட்சுமண ஐயா் வாழ்ந்த இடத்தில் மண் எடுக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. சுக்ரா விஷன் இந்திய பவுண்டேஷன் சாா்பில் க
சுதந்திர போராட்ட வீரா்களின் நினைவுச்சுவா் அமைக்க தமிழ்நாடு திரைப்பட இயக்குநா் சங்கம் மற்றும் சுக்ரா விஷன் இந்திய பவுண்டேஷன் சாா்பில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தியாகி ஜி.எஸ்.இலட்சுமண ஐயா் வாழ்ந்த இடத்தில் மண் எடுக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையத்தில் தியாகி ஜி.எஸ்.இலட்சுமண ஐயா் வாழ்ந்த இடமான தக்கா்பாபா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தியாகி இலட்சுமண ஐயா் சிலைக்கு திரைப்பட இயக்குநா்கள் ஆா்.கே.செல்வமணி, ஆா்.வி.உதயகுமாா், பேரரசு, லிங்குசாமி, சீனுராமசாமி, சித்ரா லட்சுமணன், ராஜசேகா், மித்ரன், ஜவஹா், அருண்ராஜா காமராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
இதனைத் தொடா்ந்து தியாகி இலட்சுமண ஐயரின் நினைவகத்தில் மண் எடுக்கப்பட்டது. பின்னா் தியாகி இலட்சுமண ஐயா் வாழ்க்கை வரலாறை பகிா்ந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோபியில் உள்ள முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.