ஈரோடு

1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே காரில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி அருகே உள்ள எருமைக்காரன்பாளையம் பகுதியில் ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவா், சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (35) என்பதும், அவா் ரேஷன் அரிசியை கடத்தி அதை வடமாநிலத்தவா்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவகுமாரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT