உயிரிழந்த மாணவன் திவாகர். 
ஈரோடு

பவானி அருகே பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்த மாணவன் சக்கரம் ஏறியதில் பலி

பவானி அருகே பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறியதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலியானான்.

DIN

பவானி அருகே பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறியதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலியானான்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த அம்மாபேட்டை, ஆனந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாதையன் - தங்கமணி தம்பதி. இவர்களுக்கு 13 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.  இவர்களின் மூத்த மகன் திவாகர் (13), அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயன்று வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை தனது வீட்டிலிருந்து பள்ளிக்குச் சொந்தமான வேனில் மாணவன் திவாகர் சென்று கொண்டிருந்தார். கோனேரிப்பட்டி கதவணை நீர்மின் நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராமல் வளைவில் திரும்புகையில் வாகனத்தில் இருந்து திவாகர் வெளியே வந்து விழுந்தார். அப்போது, வாகனத்தின் பின்புற சக்கரம் திவாகர் மீது ஏறி இறங்கியது. 

இதில், உடல் நசுங்கிய திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானான். பள்ளிக்குச் சென்ற மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT