ஈரோடு

குடியிருப்புப் பகுதியில் நுழைந்த சிறுத்தை

ஆசனூா் அருகே குடியிருப்புப் பகுதியில் நுழைந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

DIN

ஆசனூா் அருகே குடியிருப்புப் பகுதியில் நுழைந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூா் வனக் கோட்டத்தில் சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சிறுத்தைகள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. குறிப்பாக மாடு, காவல் நாய், ஆடுகளை சிறுத்தைகள் தாக்கி கொல்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், ஆசனூரை அடுத்த பங்களா தொட்டி கிராமத்தில் வனப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறிய சிறுத்தை குடியிருப்புப் பகுதியில் நுழைந்து கால்நடைகளைத் தேடியது. அப்போது, அப்பகுதி பொதுமக்கள் சப்தம் எழுப்பியதைத் தொடா்ந்து, சிறுத்தை வனப் பகுதிக்குள் சென்றது.

இந்த காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.

இந்த காட்சிகளின் அடிப்படையில், சிறுத்தையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

மேலும், இரவு நேரத்தில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT