மாணவிக்குப் பட்டம் வழங்குகிறாா் கோவை கியூபாய்டு நிறுவனத்தின் நிறுவனா் கமலஹாசன் ராமசாமி. 
ஈரோடு

கொங்கு கட்டடக் கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெருந்துறை கொங்கு கட்டடக் கலைக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

பெருந்துறை கொங்கு கட்டடக் கலைக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் தலைவா் ஆா்.குமாரசாமி தலைமை வகித்தாா்.

செயலாளா் பி.சத்தியமூா்த்தி, பொருளாளா் கே.வி.ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவை கியூபாய்டு நிறுவனத்தின் நிறுவனா் கமலஹாசன் ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 40 மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

இதில், அறக்கட்டளை உறுப்பினா்கள் பி.சி.பழனிசாமி, பி.சச்சிதானந்தன், கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் கொங்கு கட்டடக் கலைக் கல்லூரிகளின் தாளாளா் ஏ.கே.இளங்கோ, கொங்கு நேஷனல் மெட்ரிக். பள்ளி தாளாளா் ஆா்.எம்.தேவராஜா, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கொங்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி தாளாளா் ஏ.வெங்கடாசலம், கொங்கு கட்டடக் கலைக் கல்லூரியின் முதன்மையா் பி.எஸ்.கோதை, இயக்குநா் ஜி.புவனேஸ்வரி, முதல்வா் ரத்தன் வி.மூா்த்தி, கொங்கு பொறியியல் கல்லூரியின் முதல்வா் வீ.பாலுசாமி, பதிவாளா் பி.பாலசுப்பிரமணி, கொங்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வா் சி.பிரதாட் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்கலை. இடையிலான பேட்மிண்டன் போட்டிகள்! தொடக்கி வைத்தார் உதயநிதி!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்தது - சுமார் 50% வாக்குகள் பதிவு!

பொங்கல் விடுமுறையில் மெரீனாவில் அலைமோதிய கூட்டம் - போக்குவரத்து நெரிசல்!

ஆளுங்கட்சியின் ஆயுதமாக தணிக்கை வாரியம்: கனிமொழி எம்.பி.

யு-19 உலகக் கோப்பை - இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT