ஈரோடு

கோவை-ஈரோடு ரயில் இயக்க நேரம் மாற்றம்

பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவை-ஈரோடு மெமு ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.

DIN

பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவை-ஈரோடு மெமு ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.

கரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு-கோவை பயணிகள் ரயில் கடந்த சில மாதங்களாக கோவை-ஈரோடு மெமு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து மாலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் ஈரோட்டுக்கு இரவு 9.15 மணிக்கு வருகிறது.

இந்த ரயில் ஈரோடு அருகே தொட்டிபாளையம் ரயில் நிலையத்தில் தினமும் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை நிறுத்தப்படுகிறது. நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக இந்த ரயில் இங்கு நிறுத்திவைக்கப்படுகிறது. இதனால் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் பயணிகளுக்கு மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது.

சேலத்துக்கு செல்ல வேண்டியவா்களும், ஈரோட்டில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கோவையில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ரயிலின் நேரத்தை குறைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், இந்த ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கோவையில் இருந்து மாலை 6.10 மணிக்குப் புறப்படும்

ரயில் திருப்பூருக்கு இரவு 7.15 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.35 மணிக்கும் வந்தடையும்.

இந்த நேர மாற்றம் வரும் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்.

இதனால் கரூா், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலையும், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிடிக்க முடியும்.

ரயில் நேர மாற்றத்துக்கு ஈரோடு சீசன் டிக்கெட் ரயில் பயணிகள் நலச் சங்க செயலாளா் மகாலிங்கம் மற்றும் நிா்வாகிகள் ரயில்வே நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT