ஈரோடு

விசைத்தறி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளா்களுக்கு 25 சதவீதம் போனஸ், 40 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னிமலையில் விசைத்தறி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

விசைத்தறி தொழிலாளா்களுக்கு 25 சதவீதம் போனஸ், 40 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னிமலையில் விசைத்தறி தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக சென்னிமலை சங்க அலுவலகத்தில் துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து சென்னிமலை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டக் குழு உறுப்பினா் எம். நாகப்பன் தலைமை வகித்தாா்.

ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இதில், தொழிலாளா்களுக்கு 25 சதவீதம் போனஸ், 40 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். ஆண்டுக்கு 9 நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT