லாரி கவிழ்ந்து விபத்து
கா்நாடகத்தில் இருந்து சூரியகாந்தி பூ பாரம் ஏற்றி வந்த லாரி, திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM
கா்நாடகத்தில் இருந்து சூரியகாந்தி பூ பாரம் ஏற்றி வந்த லாரி, திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து சூரியகாந்தி பூ பாரம் ஏற்றிய லாரி ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநா் பிரவின்குமாா்(24) ஓட்டி சென்றாா். திம்பம் 17ஆவது வளைவில் திரும்பும் போது லாரி நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் பிரவின்குமாா் காயமின்றி உயிா் தப்பினாா். சாலையோரம் கவிழ்ந்தால் போக்குவரத்து பாதிப்பின்றி வாகனங்கள் பயணித்தன.